Sani Santhi Homam and Tailabishekam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 07.03.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சனி சாந்தி ஹோமத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஹோமத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மஹா சண்டியாகத்தின் இரண்டாம் கால யாக பூஜைகளும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் சென்னை திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினர்களின் தேவி மாஹாத்மியம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடைபெற்றது. இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். மேலும் நாளை 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மங்கள மஹா சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதியும், மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் போன்ற 6 ஹோமங்களும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images