

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 04.03.2017 சனிக்கழமை காலை 10.30 மணியளவில் சகல தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம் நடைபெறுகிறது. வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தின் தடைகடள பெரிதும் பாதிக்கிறது.
?பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரத்தினால் ஏற்படும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சனிசாந்தி ஹோமமும் சனி ப்ரீத்தி ஹோமமும நடைபெற்று வருகிறது.
இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்தி , ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெறுகிறது. இதில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நேல்பொரி, ந.எண்ணை, வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், பைரவருக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்டிதனர் தெரிவித்தனர்.
Tamil version