Saraswathi Homam with Panchami Homam.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வசந்த பஞ்சமியை முன்னிட்டு நாளை 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு பஞ்சமி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற உள்ளது.

வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு நடைபெறும் ஹோமங்களிலும், விசேஷ ஆராதனை பூஜைகளிலும் பங்கேற்று வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினமாகும் வசந்த பஞ்சமி நாள்.

இந்த விசேஷமான வசந்த பஞ்சமியில், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் குழ்ந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், திறன், ஞாபக சக்தி, ஞானம், புத்திசாலித்தனம் ஆகியவை பெற்று வாழ்க்கையில் மேன்மை அடையவும், தொழில் வேளைகளில் சிறந்து விளங்கவும், தேர்வுகளில் வெற்றிபெறவும், பஞ்சமி யாகமும், ஸ்ரீ வாணி சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. இப்பூஜைகளில் பங்கேற்று அனைவரும் ஸ்ரீ சரஸ்வதி தேவி அருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images