

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி ஷஷ்டி திதியை முன்னிட்டு வருகிற 04.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சத்ரு சம்ஹார முருகர் ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
சத்ரு சம்ஹார ஹோமம் தீயவற்றிலிருந்து, எதிரிகளின் தொல்லையிலிருந்து, நாம் பாதுகாப்பு பெற முருக பெருமானின் அருளாசியை பெற நடத்தப்படும் ஹோமம் ஆகும். அவர் நம்மை தீமையிலிருந்து காப்பற்றி வாழ்வில் நலன் அளிக்க வல்லவர். அவரை ஆராதிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஹோமம், மந்தநிலை,பயம், ஆன்ம பயம் நீக்கி அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க வல்லது. இந்த ஹோமத்திலிருந்து உருவாகும் மிகப்பெரிய ஆற்றல் ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்கி நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வழி காட்டுகின்றது. கடவுள்,முன்னோர்கள் மற்றும் கிரகங்களின் சாபங்களிலிருந்து நம்மை விடுவித்து தீய கர்மாவினை நீக்குகின்றது. வாரிசுகள், குடும்ப நல்லுறவு, கடன்களிலிருந்து விடுதலை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பு போன்ற நல்லாசிகளை வழங்குகின்றது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமத்திலும், அபிஷேக ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.