

மருத்துவர்கள், புரோகிதர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், முகநூல் மற்றும் சமூக ஊடக நண்பர்கள், ஆசிரிய பெருமக்கள் பலவேறு தரப்பினர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் பயன்பெறும் விதத்தில், அவப்பொழுது சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வரும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் வருகிற சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை ஜோதிட மேளாவுடன் ஜோதிடர்கள் குடும்ப நலன் கருதி ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் 75 பரிவார தெய்வங்களின் அருள்பெற வேண்டி சகல தேவதா ஹோமமும் நடைபெறுகின்றன. இதில் வாஸ்து ஜோதிடம், கணித ஜோதிடம், எண் கணித ஜோதிடம், நாடி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், டாரட் ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், கையெழுத்து ஜோதிடம், அருள் வாக்கு ஜோதிடம், ஜாமக்கோள் ஜோதிடம், அஷ்ட மங்கள ஜோதிடம் போன்ற பல்வேறு ஜோதிடத்துறை சார்ந்த ஜோதிடர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் இயற்கை வளம், நீராதாரம், மழை, ஆரோக்யம், ஐஸ்வர்யம், திருமணம், குழந்தை பாக்யம், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம், தொழில், வியாபாரம், வெளிநாட்டில் வேலை போன்ற பல்வேறு தேவைகள் வேண்டி பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன. இந்த வேள்வியில் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
Tamil version