Six Special Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக மக்களின் நலன் கருதி 26.01.2019, 27.01.2019 ஆகிய இரண்டு தினங்கள் ஆரோக்யம் தரும் ஆறு ஹோமங்கள் நடைபெற்று, இன்று மதியம் 2.00 மணியளவில் தச பைரவர் யாகம் மஹா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பங்கு பெற்றனர். தனித்தனி ஹோமகுண்டங்கள் அமைத்து திருஷ்டி துர்கா ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், தன ஆகர்ஷண ஹோமம், தன்வந்திரி ஹோமம், கால பைரவர் ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமத்துடன் தச பைரவர் யாகங்கள் நடைபெற்றது.

இதில் சென்னை திரு. M.V. நாராயண குப்தா, International Director – Calendar of Events, Vasavi Clubs International., திரு. P. சேஷாத்ரி, General Secretary, International Vaish Federation, Tamil Nadu State Vibhag., வேலூர் திரு. உதயசங்கர், உரிமையாளர், துர்கா பவன் ஓட்டல், மற்றும் Dr. தொப்பகவுண்டர், Dr. பரிமளா தொப்பகவுண்டர், Dr. கோபிநாத் குடும்பத்தினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images