

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 17.11.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
சமீபத்தில் மிக கொடுமையாக சூறையாடிய கஜா புயலால் கடலூர், நாகபட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மாவட்டங்களிலும் மேலும் சில இடங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும், அதில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா நல்ல முறையில் சாந்தி அடையவும், அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் மன அமைதி பெறவும், சூறாவளி புயலினால் குடிசைகளும், கால்நடைகளும், இதர பொருட்களும் இழந்துள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், அதனால் உடல் நிலைகள், மன நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சிறப்பு தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமமும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version