Special Poojas and kuttupirarttanaikal Held on 71 th Republic Day.

இராணிப்பேடை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  அருளாசிகளுடன் குடியரசு தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குடியரசு தின கொடியேற்றமும், அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டி ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெற்று, தங்க முலாம் பூசபட்ட வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், நவரத்தினம் மற்றும் பஞ்ச லோஹ தகிடுகளுக்கு பக்தர்கள் அயோத்தியில் ராமர் ஆலயம் விரைவில் அமைய வேண்டி பிரார்த்தனையுடன் ராம நாம ஜபத்துடன் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிக்ஷத் துணை தலைவர் திரு. M.J.  துளசிராம் மற்றும் அவர் குடும்பத்தினர்கள், சிப்காடு நவசபரி ஆலய நிர்வாகி திரு. ஜெயச்சந்திரன், ஆரிய சமாஜம் பிரச்சாரக் திரு. கண்ணன் ஜி அவர்கள், வேலூர் சிருஷ்டி ஸ்கூல் காரியதர்சி திருமதி. பூர்ணிமா பிரசன்னா, ISRO சங்கர், கரூர் வாஸ்து ஜோதிடர் திரு. முத்துராஜா, M.S.  ஸ்க்ரீன்ஸ் சேதுராமன், சென்னை தொழில் ஆலோசகர் திரு. ராமநாதன் குடும்பத்தினர், மலேசியா திரு. பழனிசாமி செட்டியார் விஸ்வநாதன், தர்மபுரி திரு. R .மணி குடும்பத்தினர், திருநெல்வேலி திரு. நாகமணி, திரு. திருமுருகன் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images