

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி மழை வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் சென்ற மூன்று மாத காலமாக விசேஷமான பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த வைபவம் நேற்று சண்டி ஹோமமும் இன்று சனி சாந்தி ஹோமமும் நடைபெற்று பூர்த்தி பெற்றது. இந்த வைபவ நிறைவில் மழை பெய்தது மன நிறைவு தந்தது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.