

வாலாஜாபேட்டை என்றாலே பட்டு ஜவுளிகள், பச்சிலை மருந்து, என்று தான் பிற மாநிலங்களில் நினைத்துக் கொண்டிருக்கின்ற..மக்களுக்கு தற்பொழுது வாலாஜா என்றால் தன்வந்திரி பீடம் என்றும், சித்தர்கள் பூமி என்றும் பெருமை சேர்த்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை அனந்தலை மதுராவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 2004ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உலக அளவில் பிரம்மாண்டமான முறையில் தன்னுடைய பெற்றோர்களை குருவாக வைத்து அவர்களின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தை உலக மக்களின் நலன் கருதியும் அறிவியலுடன் ஆன்மீகத்தை அறியச் செய்யும் விதத்தில் உருவாக்கியுள்ளார்.
வாலாஜாபேட்டை அருகேயுள்ள சோளிங்கபுரத்தை ஔஷதகிரி என்றும் காஞ்சிபுரத்தை அருளாளகிரி என்றும் அழைக்கப்படுகின்றனர்..இவற்றிற்கு இடையே உலகம் முழுவதும் சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களைக் கொண்டு மந்திர மலையாக தன்வந்திரி பீடமாக உருவெடுத்து உள்ளது.
தன்வந்திரி பீடத்தின் வளாகத்தில் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர், ஸ்ரீ வள்ளலார், 468 சித்தர்கள் பூமி, சொர்ணாகர்ஷண பைரவர், மற்றும் ஷண்மத பீடமாக 73 திருச்சந்நிதிகள் உருவாகியுள்ளது .மற்றும் எங்கும் இல்லாதவாறு ஸ்வாமிகளின் பெற்றோருக்கு ஆலயம் அமைத்து.தினமும் கோ பூஜை, ,நித்திய யக்ஞம், அன்னதானம், கூட்டுப் பிரார்த்தனை விஷேச திருமஞ்சனம் போன்றவைகளை நிவாரண பூஜைகளாக நடக்கிறது.
ஸ்வாமிகள் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ முகாம், கல்விசேவை, திருமண உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் முதியோர்களுக்கு மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள்,எழுதுகோல்கள், ஏழை எளியவர் மற்றும் சாதுக்களுக்கு வேஷ்டி சேலை வழங்குதலுடன், தியானம்,யோகா,விழிப்புணர்வு பயிற்சிகள் மக்கள் எளிதில் பங்கேற்கும் விதத்தில் அளித்து வருகிறார்..இத்தகைய சிறப்பு வாய்ந்த பீடத்தினுடைய தாரக மந்திரமே நோயற்று வாழட்டும் உலகு என்பதாகும்.
ஆரோக்ய பீடத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் நோயில்லாமல் ஆரோக்யமாக நலமுடன் வாழவும் அனைத்து சௌபாக்கியங்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் தினமும் சகல தேவதா ஹோமத்துடன் தன்வந்திரி ஹோமத்தை நடத்தி வருகிறார்.
அதில் குறிப்பாக.365 நாட்கள் 365 ஹோமங்கள் வருடம் முழுவதும் சண்டியாகம், மஹாருத்ரம்,அதிருத்ரம், 6000 கிலோ நெய் மிளகாயை கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா ஹோமம், 468 குண்டங்களை கொண்டு 468 சித்தர்கள் யாகம், 1 கோடி தனஆகர்ஷண மூலமந்திர ஜபம், குபேர லஷ்மி யாகம் பத்து லட்சம் ஏலாக்காய்களைக் கொண்டு லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம்,ஒரு லட்சம் நெல்லிக்கனிகளைக் கொண்டு கனகதாரா ஹோமமும், 15 ஆயிரம் வாழைப்பழங்களைக் கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஹோமமும், 24 மணி நேரத்தில் 27 ஹோமங்களும் 1008 சுமங்கலி பூஜைகள் 1008 தம்பதி பூஜைகள் நடத்தி பீடத்திற்கு அறிவியலுடன் கலந்த ஆன்மீக சேவையை ஆற்றி வருகிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை செவ்வாய் கிழமை 09.05.2017 முதல் .10.05.2017 புதன் கிழமை ஆகிய இரு தினங்களில் 1116 கலசங்களை கொண்டு பக்தர்கள் பங்கேற்று பயன்பெறும் விதத்தில் ஸ்ரீ ஸத்ய நாராயணர் ஹோமம் மற்றும் ஸ்வாமிகளின் பெற்றோருக்கு 21ம் ஆண்டு மகேஸ்வர பூஜையும் நடைபெற்று 1116 கலசங்களை பக்தர்களுக்கு ஆசிர்வதித்து வழங்க உள்ளார்.
இரண்டு நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட 1116 கலசங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த கலசத்தை பூஜை அறையில் நிரந்தரமாக வைத்து வணங்கி வந்தால் உணவு தட்டுப்பாடு இருக்காது. மேலும், குடும்பத்தில் அன்யோன்யம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்ல மாற்றம், திருமணம்,போன்ற சுபவைபவங்கள்,குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி, போன்ற அனைத்தும் கிடைக்கும்.மேற்காணும் வைபவங்களில் அனைவரும் திரளாக பங்கேற்று பலனடைய ப்ரார்த்திக்கின்றோம்.
மேற்கண்ட இரண்டு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆதினங்கள், மகான்கள் , சாதுக்கள், மாவட்ட ஆடசித் தலைவர், மாண்புமகு நீதியரசர்கள்,காவல் துறை உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்,தொழில் அதிபர்கள், வியாபார பெருமக்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் மற்றும் ஆன்மீக அன்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளார்கள்.பக்தர்கள் அனைவரும் பூஜை வைபவங்களில் கலந்து கொண்டு இறை அருள் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தன்வந்திரி பீடத்தில் நாளை நிகழ்ச்சிகள்
09.05.2017 செவ்வாய் கிழமை காலை 6.00 Tamil version