

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 25.11.2019 திங்கள்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ருண விமோசன ஹோமத்துடன் சிறப்பு திருமஞ்சனம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது.
இதில் உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த யாகத்தில் நெய், தேன், நெல்பொரி, மூலிகைகள், நவ சமித்துகள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்காளால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.