Sree Margathambigai and Karthigai Special Homam and Yagam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு வருகிற 09.12.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரையும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் வேண்டி ருத்ர ஹோமத்துடன் சங்காபிஷேகமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

சோம வார பிரதோஷம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்பதால் ஆலயங்களில் சிவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை மாத சோம வார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில் சிவனுக்கு நடைபெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்பதால் மிகவும் சிறந்த பலன்களை பெறலாம் என்பதால் சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பதாலும் அப்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட, சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதாலும் சங்காபிஷேகத்தை கண்குளிர கண்டு இறைவனை வழிபடுவதால் பலவகையான தோஷங்கள் நீங்கி, சகல செல்வத்துடன் பெருவாழ்வு வாழலாம். ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு நடைபெறூம் ருத்ர ஹோமத்திலும் சங்காபிஷேகத்திலும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெறும் விசேஷ பூஜைகளிலும் பங்கேற்று வணங்கி இறைவனின் திருவருளை பெறுவோம்.

சோம வார பிரதோஷ பலன்கள் :

மண் வளம், மழை வளம், இயற்கை வளம் பெற்று நலமுடன் வாழலாம், திருமணம் கைகூடும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும், கணவன், மனைவி ஒற்றுமை கூடும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும், ஆயுள் விருத்தி அடையும், லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை சோமவார பிரதோஷத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் வேண்டி நடைபெறும் ருத்ர ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images