

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 59 வது ஜெயந்தியை முன்னிட்டு இன்று 03.11.2019ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் சென்னை மண்டலி பக்தி பாராயண குழுவினர்களில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் போன்ற பல்வேறு பாராயணங்கள் நடைபெற்றது. இவ்வைபங்கள் சென்னை லலிதா சமிதி திரு. மோகன் குருஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் I.P.S. அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.