Sri Danvandri Perumal Temple

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஏகாதசி திதியை முன்னிட்டு இன்று 08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமம், நெல்லிப்பொடி திருமஞ்சனம் மற்றும் நவ கலச திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் விசேஷ மூலிகைகள், நெய், தேன், நவ சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு பால், தையிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி, துளசி தீர்த்தம், பஞ்சாமிருதம் போன்ற திரவியங்களால் நவ கலச திருமஞ்சனம் நடைபெற்று நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு நெல்லிப்பொடி தீர்த்தத்துடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images