

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோணா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி சிறப்பாக நடைபெறவும் காரிய சித்தி பெறவும், கர்ம வினைகள் அகலவும், முழுமுதல் கடவுளான கணபதியை வேண்டி பூர்வாங்களாக ஸ்ரீ மஹா கணபதி ஹோமமும், பிடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளு நாளை 17.06.2020 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவே சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாரூக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.