

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று 12.11.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண், பெண் திருமணத்தடை நீக்கும் ஹோமங்களுடன் சந்தான பாக்ய ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று மாலை ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் உணவு குழலில் ஏற்படும் தோஷங்கள் அகலவும், ராகு கேதுவினால் ஏற்படும் தடைகள் விலகவும், அன்னதோஷம் அகலவும், குடும்பத்தில் பல்வேறு விதமான சுப காரியங்கள் நடைபெறவும், தன தானிய சம்பத்து பெருகவும், ஆண், பெண் திருமணத்தடைகள் விலகவும், சந்தான பாக்யம் கிடைக்கவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.