

வேலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில் சோளிங்கர் செல்லும் சாலையில் அனந்தலை மதுராவில் அமைந்திருக்கிறது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.
யக்ஞ பூமியாய் திகழும் இந்த புனித பீடத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. இந்த ஹோமங்களில் கலந்து கொண்டு ஏராளமானோர் நினைத்த காரியம் கைகூடப் பெற்றனர். இதனால், பலனும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு ஒரு முறை நேரில் வந்து தரிசித்துச் செல்கிற பக்தர்கள், மீண்டும் மீண்டும் இங்கு நடக்கிற வைபவங்களில் கலந்து கொள்ள வருவதே இதற்கு சாட்சி!
வருகிற மே மாதம் 9 (செவ்வாய்) மற்றும் 10 (புதன்) ஆகிய இரு தினங்களில் பிரத்தியேகமான 1,116 கலசங்கள் வைத்து பிரமாண்டமான ஸ்ரீசத்யநாராயண ஹோமம் பூஜை மற்றும் ஸ்வாமிகளின் குருவான பெற்றோர்களுக்கு மகேஸ்வர பூஜையும் நடக்க இருக்கிறது.
சித்ரா பவுர்ணமி காலத்தில் நடக்க உள்ள இந்த ஸ்ரீசத்யநாராயண வழிபாட்டிலும் மகேஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டால், குரு அருளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறலாம் என்று ஆன்மிக நூல்கள் சொல்கின்றன. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் இந்தக் கலசங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. Tamil version