

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 03.09.2018 திங்கட்கிழமை தேய்பிறை அஷடமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அஷ்ட பைரவர், சொர்ண பைரவர், ஸ்ரீ கிருஷ்ணர் ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த யாகங்களில் தீராத வியாதிகள் தீரவும், நம்மை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியவும். கெட்ட அதிர்வுகள் விலகவும், மன அமைதியே இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைக்கவும் பைரவர் துணையுடன் செல்வவளம் பெருகவும் துன்பம் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகவும் ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடவும் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டவும். சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும், பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வமான பைரவரின் அருள் பெற மிளகு தீபம், கூஷ்மாண்ட தீபம், நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு விருப்பமான தாமரை, வில்வம், தும்பை, அரளி, மற்றும் செவ்வந்தி, பூக்களால் சிறப்பு அர்ச்சனையும், பிரார்த்தனையும் நடைபெற்றது.
ஸ்ரீகிருஷ்ணர் அருள் கிடைத்திட வேண்டி சந்தான கோபால யாகம் :
ஜனமாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு ஸ்ரீகிருஷ்ண ஹோமத்துடன், பஞ்ச திரவிய அபிஷேகமும் 10 வகையான புஷ்பங்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்று கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், சீடை, முருக்கு போன்ற 30 மேற்பட்ட பட்சணங்கள் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஸ்ரீ ஜெயந்தி பிரசாதமக வழங்கப்பட்டது. மேலும் குழந்தை வரம் வேண்டி சந்தான கோபால யாகமும், தாலாட்டும் நடைபெற்றது. இதில் தம்பதிகள் கலந்து கொண்டு குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தனர். மேலும் குழந்தைகளும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்து மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version