

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலைஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம்ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரைதிருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும் ஒரே மேடையில் ஒரேநேரத்தில், ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவமும், மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் ஸ்ரீபுரம் ஸ்ரீ நராயணி பீடம் தவத்திரு சக்தி அம்மா அவர்கள், வநதுர்கா பீடம் ஸ்ரீ பிரசாத் ஸ்வாமிகள், இராணிபேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். காந்தி அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரிகுடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version