Tamil New Year Special Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நாளை 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகமும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.

வருகிற தமிழ் புத்தாண்டில் அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும்.குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் குழந்தைகள் முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல் கல்வி சேரவும். நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும்.

மேலும் மழை வேண்டியும் மதநல்லிணக்கம், மனித நேயம் வளரவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ மகாலஷ்மி யாகமும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்திலும் பூஜையிலும் பக்தர்கள் பல்வேறு நன்மைகள் பெற பலவகையான மலர்கள், பட்டு வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட உள்ளது.

மேலும் நல்லெண்ணை,கரும்புசாறு,மூலிகை தீர்த்தம், நெல்லிக்காய் பொடி பால், தயிர் இளநீர், மஞ்சள், சந்தனம், மற்றும் துளசி தீர்த்தம்கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று பலவகை புஷ்பங்களால் சிறப்பு அர்ச்சனை செய்து, பஞ்சதீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டில் பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலன்பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images