

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி வருகிற 06.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணியளவில் குரு வாரத்தை முன்னிட்டும் நடைபெறவுள்ள குருபெயர்ச்சியை முன்னிட்டும் குரு பகவான் அருளால் பொன் ஆபரணங்கள் சேரவும், உயர்ந்த மனிதனாக இருக்கவும், திரைப்பட வாய்ப்பு கிடைக்கவும், பொருளாதாரத்தில் உயரவும், அரசியலிலும், அரசு, தனியார் வேளையில் பதவி உயர்வு கிடைக்கவும், மேலும் பல நற்காரியுங்களில் வெட்றி பெறவும் திரிபுர பைரவி ஹோமத்துடன் ஸ்ரீ குரு பகவான் ஹோமம். நடைபெறவுள்ளது.
பொன்னவன் என்ற வார்த்தைக்கு ஒப்பு இவ்வித அம்பிதை அனேக பொன் ஆபரணங்களுக்கு தலைவி என்பதால் உத்தியோக மேன்மை கோவில் கட்டுதல் குளம் வெட்டுதல் பல புண்ணிய காரியங்கள் செய்தல் சமூகத்தில் ஒரு பெரிய மனிதராக ஆகுதல், தன் முயற்ச்சியின் மூலம் சினிமா பட நாடக வாய்ப்பும் நடிப்பதும், கற்பனைக்கு எட்டாத சில நல்ல காரியங்களுக்கு சிறப்பு ஏற்படல் தனி மனித ஒழுக்கம் மேன்மை, வாகனம் விற்பனை, வீடு விற்பனை கல்லூரி நடுத்துதல் மூலம் நல்ல நெறியான வாழ்க்கையும், பொருளாதரத்தில் மதிப்பும் மந்திரி பதவிகளும் உண்டாகும், அரசியல், மாத இதழ் நடத்தும் யோகங்களும் முற்பிறவி பாவம் போகவும். அறிய கண்டு பிடிப்பும், வான் வெளி ஆராய்ச்சிகள் வெற்றியும், வெளிநாடு வெளியூர் பயண சிறப்பும் ஏற்படும், குடும்பத்துடன் சேர்ந்து வாழும் தன்மையை ஏற்படுத்தும், புகழ், கௌரவும், அந்தஸ்து உயரும் என்கிறார் முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை