

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் எட்டாவதாக விளங்குவது உச்சிஷ்ட கணபதி ரூபமாகும். உச்சிஷ்ட கணபதி பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் உள்ளது. இருந்தாலும் ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள அபூர்வமான கோலமே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.
படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் போன்ற ஐந்து கரண நிலையும் ஒரு பெண்ணின் உடலில் தான் உள்ளது என்பதை உணர்த்துபவர் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியாகும். உச்சிஷ்ட கணபதி நீல சரஸ்வதி சமேதராக எழுந்தருளியிருப்பார். உச்சிஷ்ட என்றால் எச்சம் என்பது பொருள். நாம் எதை உண்டாலும் வாயில் மீதம் உள்ளது எச்சம் தான். இவ்வுலகில் எது இருந்தாலும் இல்லையானாலும் மிஞ்சி இருப்பதும் எப்போதும் இருப்பதும் பிரம்மம்தான். அந்த மிஞ்சி இருக்கும் பிரம்ம சக்திக்கே உச்சிஷ்ட என்று பொருள். அதோடு உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே உயர்வானது என்று மற்றொரு பொருளும் உண்டு. மாயையான இந்த உலகை நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது இந்த உச்சிஷ்ட கணபதி எனும் பிரம்மம்தான். சுத்தம் அசுத்தம் என்ற இருவேறு நிலைகளை கடந்தவரே உச்சிஷ்ட கணபதி என்கிறது புராணங்கள்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுருTamil version