

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி நேன்று 05.03.2018 திங்கட் கிழமை மாலை சங்கடஹர சதுர்த்தி ஹோமத்துடன் தொடங்கி இன்று 06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாசி சுவாதி நக்ஷத்திரம், வாஸ்து நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமமும், ஸ்ரீ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் நடைபெற்று இங்கு பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. நாளை சஷ்டியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு மஹா சுதர்சன ஹோமமும் சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version