

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாசவி தேவிக்கு.இன்று மே மாதம் 05.05.2017. வெள்ளிக் கிழமை ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ வாசவி ஹோமம் மற்றும் மங்கள கௌரி ஹோமம் நடைபெற்று 10 விதமான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆரியவைசியர்களின் குலதெய்வமாகும்.வாசவியை வழிபடுவதால் குல தெய்வ அருள்பெற்று அனைவரும் சகல சம்பத்துக்களும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழலாம்.திருமணம்,குழந்தைபேறு,தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.என்பது பக்தர்களின்மாபெரும் நம்பிக்கையாகும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version