World's Priest Homam

புரோகிதர்கள் நேரம், காலம் ஏன்று பார்க்காமல் தங்கள் குடும்பம், குழந்தை ஏன்று பார்க்காமல் அவர்கள் வாழ்வில் நிகழ்வுகளுக்குமுக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின்சேவையே மகேசன் சேவை ஏன்ற முறையில் ஜாதி, இன,மொழி பேதமின்றி மற்றவர்களின் குடும்பத்தில் புரோகிதப்பணி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்விலும் சில பிரச்னைகள், சில வியாதிகள்,பலவிதமான தடைகள், மனச்சஞ்சலங்கள், கருத்து வேறுபாடுகள், பணப் பிரச்சனை, மன உபாதைகள்,மனப் போராட்டங்கள் நிகழ்கின்றனர். இத்தகைய கஷ்டங்களைமனதில்கொண்டுநடைபெறும்சுப/அசுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று ஸ்ரீவேதவ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் அனுக்ரஹத்தாலும் புரோகிதர்கள் வரப்போகும் சுப/ அசுப நிகழ்ச்சிகளுக்கு பலன்களை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு அதற்குண்டான பரிகாரங்களைச்சொல்லி பூஜைகள் செய்து க்ஷேமங்களை உண்டுபண்ணுகின்றர்.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்பக்ஷேமம்,ஆவர்களைச் சார்ந்தவர்களின்க்ஷேமத்திற்காக 16.11.2016 புதன்கிழமை காலை6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜைமற்றும் யக்ஞங்கள், வாலாஜாபேட்டை ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images