10,000 pomegranates were used in Maha Kali Yagam on 31st March 2014

10000 மாதுளம் பழங்களை கொண்டு மகாகாளி யாகம் (March 31, 2014)

உலகமக்களின் இருதய நோய்கள் தீரவும், இரத்தத்தில் உள்ள குறைகள் நீங்கவும், பில்லி,சூன்யம் செய்வினை மனஅழுத்தம் போன்ற பல தோஷங்கள் அகலவும்,நவக்கிரகதோஷம், தொழில் வியாபாரம், குழந்தைபேறு, திருமண தடைகள் அகலவும்,தெலுங்குவருடப்பிறப்பு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டும் 28.3.2014 முதல் 30.3.2014 வரை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 10,000 மாதுளம் பழங்களைகொண்டு மகா காளி யாகம். 28.03.2014 அன்று காலை கணபதி யாகத்துடன் துவங்கி காலை முதல் மாலை வரை இடைவிடாமல் யாகம் நடைபெற்றது. 30.03.2014 அன்று மாலை மஹா பூர்ணாஹீதி மற்றும் அம்மன் கலசாபிஷேகத்துடன் யாகம் நிறைவடைந்தது. ஆரம்பகால ஹோமத்தில் தவத்திரு. மோகானந்த ஸ்வாமிகள், சித்தஞ்சி சிவகாளி பீடம் ஓச்சேரி, ஸ்வாமி ராமானந்தா ராமநாதபுரம், திரு.வினோதானந்த ஸ்வாமி அமிர்பூர், திரு.ஆறுமுக ஸ்வாமி இமாசல பிரதேசம், மற்றும் திரு. யு.எஸ்.ஆறுமுகம் உதவி பத்திரபதிவு துணை தலைவர் வே.நல்லசிவன் உதவி பத்திர பதிவு துணை தலைவர்,பிச்சாண்டி மாவடட பதிவாளர்,ஜெ.ஜெயபிரகாஷ் வாலாஜா நகர், சார்பதிவாளர் கலந்து கொண்டனர். நிறைவு நாளான 30.03.2014 அன்று அகில உலக விஸ்வஹிந்து பரிஷத் ஆலோசகர் வேதாந்தம், தமிழ்நாடு செயல்தலைவர் ஆர்.எஸ்.நாரயணசாமி, தமிழ்நாடு பொதுசெயலாளார் ஆர்.ஆர்.கோபால்ஜி, மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டபொதுசெயலாளார என்.வெங்கடேசன் மற்றும் ஆற்காடு தொழிலதிபர் ஜெ.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images

`