Mupperum vizha was conducted in Peedam with the District Collector as the Chief Guest (August 29, 2014)

தன்வந்திரி பீடத்தில் மாவட்டயாட்சியர் தலைமையில் முப்பெரும்விழா.(August 29, 2014)

விநாயக சதுர்த்திவிழா, இரண்டு நூல்கள் வெளியீட்டுவிழா, கரிக்கோல பவனி விழா

தன்வந்திரி பீடத்தில் இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தன்வந்திரி விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனையும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றது, இதில் வேலூர் மாவட்டயாட்சியர் டாக்டர். நந்தகோபால் அவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தார், இதனை தொடர்ந்து தன்வந்திரி பீடத்தின் சார்பாக, தன்வந்திரிபீடமும்-,யாகங்களும்-- சனிப்பெயர்ச்சி யாகங்களும் பலன்களும் 2014 ஆகிய இரண்டு நூல்களை மாவட்டயாட்சியர் வெளியிட வேலூர் தொழிலதிபரும்,துர்காபவன் ஹோட்டல் உரிமையாளர் திரு, உதயசங்கர் அவர்களும், சென்னை பொலாரிஷ் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளான, திரு,சி,கோவிந்தராஜ் மற்றும், பிரதிப்நிவேதா, அவர்கள் பெற்றுக் கொண்டனர்,இவர்களுடன் சென்னை பூந்தமல்லி அன்னபாபா ஆலய நிறுவனர் மாதாஜி, ஸ்ரீமதி அவர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக கரிக்கோல பவனியில் உள்ள 6 அடி உயர ப்ரத்யங்கரா தேவிக்கு மங்கள ஆர்த்தி எடுத்து நிறைவு செய்யப்பட்டது தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் என்று கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.




Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images

`