தன்வந்திரி பீடத்தில் எபோலா மற்றும் டெங்கு வைரஸ் நோய் தடுக்க சிறப்பு ஹோமமும், விழிப்புணர்வும்…
தன்வந்திரி பீடத்திற்கு கடந்த இரண்டு மாதங்களாக சிங்கப்பூர், மலேசியா அமெரிக்கா, கனடா, லண்டன் போன்ற நாடுகளில் வாழும் தன்வந்திரி பக்தர்கள் கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளிடம், எபோலா நோய் வராமல் தடுப்பதற்காக சிறப்பு ஹோமங்கள் செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டதின் பேரிலும், தமிழ்நாட்டில் பெருகிவரும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும், சுற்றுபுறத் தூய்மை வேண்டியும் வருகிற 16.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மகா தன்வந்திரி ஹோமமும், கூட்டுப்பிரார்த்தனையும், விழிப்புணர்வும் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கொடிய நோய்க்கு தீர்வு கிடைக்க வேண்டி எண்ணற்ற ஹோமத்திரவியங்களும், மூலிகை திரவியங்களும் பயன்படுத்தபடுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமமைடய வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. மேலும் தன்வந்திரி பீடத்திற்கு வருகைபுரியும் பக்தர்களிடமும், பீடத்தில் சேவை செய்யும் சேவகர்களிடமும் மேற்கண்ட இரண்டு விதமான நோய்கள் எவ்வாறு ஏற்படுகிறது, அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதையும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாமும் நடைபெற உள்ளது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.