இயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கியது. அதில் நமது முன்னோர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்புகளின் பயனை அனுபவித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தெய்வீக மூலிகைகளான மூலிகை பொடியாகும் இதை நட்சத்திர மூலிகை சாம்பிராணி தூபம் என்றும் கூறலாம்.
மனிதனுக்கு இயற்கையிலேயே பல கஷ்டங்கள், துன்பங்கள் வரும் என்று தெரிந்த நமது முன்னோர்கள் அதிலிருந்து விடுபட பல வழிமுறைகளை கையாண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த தெய்வீக மூலிகைத்தூள்.
பணக்கஷ்டம், கடன், வறுமை, நோய், குடும்ப உறவுகளில் விரிசல், கணவன், மனைவி பிரச்னை, திருமணத் தடை, குழந்தை இல்லாமை, நிரந்தர வேலை இல்லாமை, சேமிப்பு இல்லாதது போன்ற பல பிரச்னைகளில் மனிதன் தனக்கு தெரியாமலேயே சிக்கிக் கொள்கிறான். இதுபோல பிரச்னைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வு வாழ தினம்...தினம்... போராட்டம்தான். இதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம் பேர். கண்ணில் படும் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். இறைவனை வணங்கி பிரச்னைகளிலிருந்து வெளியேற பிரார்த்தனை செய்கின்றனர்.
இருந்தாலும் பிரச்னைகள் தீர்ந்ததபாடில்லை. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து முழுமையாக வெளியேற நம் முன்னோர்கள் காட்டிய வழியில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 27 நக்ஷத்திரங்கள்க்குரிய விருக்ஷங்களையும், 9 நவக்கிரகங்கள்க்குரிய விருக்ஷங்களையும் காலசக்கரமாக அமைத்து விசேஷ பூஜைகள் செய்து, அவ்வப்பொழுது அவ்விருக்ஷங்களுக்கு ரக்ஷாபந்தனம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்விருக்ஷங்களுடன் இதர மூலிகைகளை கொண்டு தெய்வீக நட்சத்திர மூலிகையுடன் சாம்பிராணி, குங்குலியம், சேர்த்து மூலிகை சாம்பிராணி செய்து வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து பஞ்சபூதங்களையும், அஷ்ட்திக் பாலகர்களையும், தன்வந்திரி பகவானையும் பிரார்த்தனை செய்து தேவைப்படும் நபர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்கி வீட்டில் பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்னைகள் உங்களை விட்டு முழுமையாக அகலும். கடன், வறுமை, நோய், உறவுகளில் விரிசல் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும். தேவைக்கு வொண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.