Danvatri Peedam

ஆரோக்கியம் என்பது வாழ்வின் மிக முக்கியமான அம்சம். 'ஆரோக்கியமே செல்வம்'. இது அனைவருக்கும் தேவையானது என்பது உண்மை. குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால் கூட ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய சுமூகமான தினசரி நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும். இதனால் பதட்டங்களும் மன அழுத்தங்களும் வந்து அவருருடைய மன அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு வீடு, மனை பாக்யம் அமையவில்லை என்ற கவலை. திருமண வயதிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயதில் திருமணம் நடைபெறவில்லை என்றால் மனக்கவலை, தொழில், வியாபாரம், விவசாயம் சரியாக அமையவில்லை என்றால் தேவயற்ற மன உளச்சல், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்யம் இல்லையென்றால் கணவன் மணைவிக்குள் கருத்து வேற்பாடுகள் ஏற்பட்டு அதனால் மன முறிவு, எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் உடலில் எதோ கொடிய நோய் ஏற்பட்டுள்ளது என்ற மாயையில் உடல் நிலை பாதிக்கப்படுதல். உத்யோகத்தில் வேலை நீக்கம், சம்பள உயற்வு பாதிப்பு, உடன் பணிபுரியுபவர்களால் ஏற்படும் தொல்லை, மேலதிகாரிகளின் நச்செரிப்பு, . ஒரு சில குடும்பங்களில் கண்திருஷ்டி, பொறாமையும் ஏற்பட்டு அவதி படுதல்.

இது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மோசமாக சிதைவுறுகிறது. எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு நோயால் அல்லது வேறு ஏதேனும் ஒரு நோயின் வடிவத்தில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் சில குடும்பங்களில், வெளிப்படையாகத் தென்படவில்லை என்றாலும், எவ்விதக் காரணங்களும் இல்லாமல் யாராவது ஒருவர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுகிறார் என்பது உண்மை இதுபோன்ற நிகழ்வுகள், ஏன் நாம் மட்டும் அடிக்கடி மனநோய் மற்றும் உடல் நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கஷ்டமான சூழ்நிலைகளிலேயே வாழ நேரிடுகிறது என்ற கேள்வியுடன் வாழ்ந்து வருகிறோம். இப்படிப்பட்ட மக்களுக்கு தீர்வு உண்டா என்றால் உண்டு என்று சொல்லலாம். மேற்கண்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணலாம். அவை எங்கே என்றால் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஒன்றே அனைத்திற்கும் தீர்வு எனலாம்.

நிறுவனர் முரளிதர சுவாமிகள். இவர் தன்தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தினை கொண்டு கடந்த 1995ம் ஆண்டு ஸ்ரீமாருதியின் உதவிக்கரங்கள் என்ற ஆன்மீக தர்ம ஸ்தாபனத்தை ஏற்படுத்தி, தன்வந்திரி பீடத்தை அமைத்து கும்பாபிஷேகத்திற்கு முன்னர் 7 அடி உயரமுள்ள தன்வந்திரி மூலவரை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கரிக்கோல ஊர்வலமாக 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் இந்தியாவின் பல இடங்களில் பவனி வந்து, நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவ கோவில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்கள், சமூக கூடங்களில் உலக மக்கள் பங்கு பெரும் வகையில் வைத்து 147 தன்வந்திரி ஹோமங்கள் நடத்தி ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 67 வைணவ ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு ஆராதனை நடத்தி எம்பெருமானின் அபிமானத்தை பெற்று வந்ததால் தன்வந்திரி பீடத்திற்கு திவ்ய தேச அபிமான ஷேத்திரம் என்ற பெயருடன் சென்ற 15.12.2004ம் தேதி தன்வந்திரி பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் சிறந்த மனநலத்துடன், காக்கும் தன்வந்திரி பகவான் கையில் அமிர்தகலசம், சீந்தல் கொடியுடன் 7 அடியில் நின்ற கோலத்தில் புன்முருவலுடன் 75 பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இப்பீடத்திற்கு வருகை தந்து இங்கு தினசரி நடைபெறும் ஹோம பூஜைகளில் பங்கேற்று ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் இதர பரிவார மூர்த்திகளையும் தரிசித்து வந்தால், மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு பெறலாம் என்கிறார்கள் இங்கு வருகை புரிந்து பயன் பெற்ற பக்தர்களும் ஸ்ரீதன்வந்திரி குடும்பத்தினரும்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஹோமங்கள், பூஜைகள், பலன்கள் :

தினசரி காலை 9.00 மணி முதல் 9.30 மணிக்குள்ளாக பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது இங்கு தனிச்சிறப்பு.

பௌர்ணமி தோறும் தோறும் காலையில் நடைபெறும் சுயம்வர கலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகங்களில் பங்கேற்று மாலை நேரத்தில் ராகு-கேதுவிற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவலிங்க ரூபமான 468 சித்தர்களை வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் மற்றும் ஆண், பெண் திருமணத்தடை நீங்குகிறது, குழந்தை பாக்யம் கிடைக்குகிறது என்கிறார்கள் ஹோம பூஜைகளில் பங்கேற்ற பக்தர்கள்.

பிரதி தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா பைரவர் யாகத்தில் பங்கேற்று ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரையும் அஷ்ட பைரவர் சகித மஹா பைரவரையும் வழிபட்டால் குடும்பத்தில் உள்ள பண பிரச்சனைகள் அகலும், விவசாயம் செழிக்கும், வெளிநாடு வேலைகள் கிடக்கும், சத்ரு உபாதைகள் விலகும்.

பிரதி ஏகாதசி திதியில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் மஹா தன்வந்திரி ஹோமத்திலும், சிறப்பு நெல்லிக்காய் பொடி அபிஷேகத்திலும் கலந்துகொண்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை தரிசித்து அபிஷேக தீர்த்தம் உட்கொண்டால் உடல் நோய், மன நோய்கள் விலகி பூர்ண ஆயுர் ஆரோக்யம் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரதி திருவோணம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு நடைபெறும் சிறப்பு ஹோமத்திலும், தைலாபிஷேகத்திலும் பங்கேற்று ஸ்ரீ விநாயகர் தன்வந்திரியை வழிப்பட்டு தைல பிரசாதத்தை உட்கொண்டால் சர்க்கரை வியாதி, வலிப்பு நோய், மற்றும் உடல் சார்ந்த நோய்கள், மனம் சார்ந்த நோய்கள் விலகுவதை காணலாம்.

அமாவாசை நாளில் நடைபெறும் ப்ரத்யங்கிரா யாகத்தில் பங்கேற்று ப்ரத்யங்கிரா தேவியையும், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினியையும் வழிபட்டால் சகல விதமான கண்திருஷ்டி தோஷங்கள், அபிச்சார தோஷங்கள் நீங்குகிறது என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்!

பிரதி சனிக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பில் ஸ்ரீ பாரத மாதாவிற்கு அடுத்ததாக அமைந்துள்ள ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயரை தரிசித்து அங்கு கிடைக்கும் மட்டை தேங்காய் வாங்கி வைத்துக் கொண்டு 9 படிகளில் உள்ள 9 ஆஞ்சநேயரையும் பிரார்த்தனை செய்து கொண்டு படியேறி சஞ்சீவி ஆஞ்சநேயரை 9 முறை வலம் வந்து தரிசனம் செய்து ஆஞ்சநேயருக்கு மட்டை தேங்காய் சமர்ப்பிப்பவர்களுக்கு விரைவில் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவதும் உறுதி என்கிறார்கள் பயன் பெற்ற பக்தர்கள்.

மேலும் மாதந்தோறும் வரும் மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சார்த்தி வழிபட்டால் காரியத் தடைகள் அகலும், நவ கிரக தோஷங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

செவ்வாய்க்கிழமை மாலை நல்ல வேலை கிடைக்கவும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் அமர செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை சூட்டி 27 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து பலன் பெற்று வருகிறார்கள் பக்தர்கள்.

அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் அற்புத பீடமாக திகழ்ந்து விளங்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வேலூர் பஸ் நிலையத்திலிருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரமும், வாலாஜாபேட்டை பஸ் நிலையத்திலிருந்து வடக்கே 3 கிலோ மீட்டர் தூரத்திலும், வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3 கிலோ மீட்டர் தூரமும், சென்னையில் இருந்து மேற்கே 110 கிலோ மீட்டர் தூரத்திலும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது. மேலும் திருவண்ணாமலையில் இருந்து வடக்கே 90 கிலோ மீட்டர் தூரமும், திருப்பதியில் இருந்து தெற்கே 100 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். தினசரி காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆரோக்ய பீடம் செயல்பட்டு வருகிறது.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images