வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள். வருகிற 16ம்தேதி நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில் ஸ்ரீஅஷ்ட கால மகா பைரவருடன் நவ பைரவர்களாக காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என தன்வந்திரி பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.
அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருகிற ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி மற்றும் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம் ஆகியவையும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
எண்ணிலடங்காத பலன்களும், நோய் பயம் மற்றும் எதிரிகள் தொல்லைகள் நீங்கிடவும் வேண்டி பக்தர்கள் இந்த விபூதி அபிஷேகத்தில் பங்கேற்று ஸ்ரீ அஷ்டகால மகா பைரவரை வணங்கி பயன் பெறலாம்.
மேலும் 16ம்தேதி அகில உலக புரோகிதர்கள் மற்றும் புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
Tamil version