1008 Kalasa Thirumanganam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இன்று 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு 300 க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு மஹா தன்வந்திரி ஹோமமும் 1008 கலசங்களில் மூலிகை தீர்த்தம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் கிராம தேவதைகளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க வேண்டி ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், நவகன்னிகளுக்கும் பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் ஆ, மிளகு, சுக்கு, திப்பலி, வெள்ளம் போன்ற பொருட்களை கொண்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவர் சன்னதி அருகே, பக்தர்கள் தன்வந்திரி மஹா மந்திரங்களை ஜெபம் செய்து கொண்டே தீபாவளி லேகியம் தயாரித்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நிவேதனம் செய்யபட்டது. இந்த மாமருந்து சர்வ ரோக நிவாரணம் வேண்டி தீபாவளியன்று பீடத்திற்கு வருகை புரியும் பக்தர்களை யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து திருக்கரங்களால் இலவசமாக ஔஷத பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images