108 Kanya Pooja

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலைஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம்ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை துளசி செடி - நெல்லி செடி திருக்கல்யாணம், 108 கன்யா பூஜை பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நடைபெறுகிறது.

துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் :

அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில் மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி. திருமாலின் அம்சமே நெல்லி மரம். துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால் பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார்.

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். துளசி திருமாலுக்கும், திருமகளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு நிறைந்து இருப்பார் என்பது ஐதீகம்.

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியும் நெல்லி செடி சேர்த்து வழிபடுவது சிறப்பு. பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் தான் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாமுக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான். அனைவரும் துளசி பூஜை செய்து பயன் பெறுவோமாக.

14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை ஒவ்வொருவருக்கும்மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறவும், எங்கும் பசுமையாக இருக்கவும், நீர்வளம், நிலவளம் பெருகவும் துளசி தேவிநெல்லிராஜா ( துளசி செடிநெல்லி செடி) திருக்கல்யாணமம்,நடைபெறுகிறது.

108 கன்யா பூஜை :

அன்னை பராசக்தியின் அருளை மிக விரைவாக பெற்றுத் தரும் செயல்களில் கன்யா {பெண்} குழந்தைகளை பாலா திரிபுர சுந்தரி அம்மனாக பாவித்து பூஜை செய்வதும், அந்தக் குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதும் ஒன்று.

இரண்டு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகளையே கன்னிகையாக அமர்த்தி கன்யா பூஜை செய்யப்பட வேண்டும்.

மேலும் இந்தக் குழந்தைகள் எப்படிப்பட்ட குழந்தைகளாவும் இருக்கலாம். ஒவ்வொரு வீட்டுக் குழந்தைக்கும் ஒவ்வொரு தனித் தனி சக்தியுண்டு என்பதால் வெவ்வேறான பலன்கள் ஏற்படும்.

அனைத்து கார்ய சித்திகளையும் அடையலாம். வாழ்க்கையில் அனைவரிடத்திலும் அனைத்திலும் வெற்றியை அடையலாம். வியாபாரத்தில் லாபத்தையடைந்து செல்வந்தராக ஆகலாம். மகன், மகள், பேரன், பேத்தி என குடும்ப வம்ச மிருத்தியை அடையலாம். மிகப் கொடுமையான தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளை பெற்று நன்மையை அடையலாம் என்கிறது தர்ம சாஸ்த்திரம்.

அனைவரும் அன்னையின் குழந்தைகளே! ஆகவே கன்யா பூஜை செய்ய சின்னஞ்சிறிய குழந்தைகள்தான் தேவையே தவிர பாகுபாடுகள் வேறுபாடுகள் பார்க்கத் தேவையில்லை. எந்த குழந்தையையும் பூஜை செய்யலாம்.

வருகிற 14.03.2019 மாசி மாதம்30ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை பெண்சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில்சுபிட்சம் ஏற்படவும், பாலாரிஷ்ட தோஷம் நீங்கவும், கிராம தேவதை அருள் பெறவும், சப்தகன்னி, நவகன்னிகைகள் அருள் பெற்று சுப காரியங்கள் நடைபெற 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜை நடைபெறுகிறது.

இவ்வைபவங்களில் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அருளுடன்குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images