108 Kilo Kukumam Abishekam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 108கிலோ குங்குமத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

மஹிஷாசுர மர்த்தினி சிறப்பு :

மஹிஷாசுரமர்த்தினிக்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பங்கேற்று வழிபடுவதால் அசுர குணம் அழியும், தடைகள் நீங்கும், வியாதிகள் குணமாகும், பாவங்கள் விலகும், பயம் அகலும், சர்வ துக்கங்களும் விலகும். துர்க்காதேவியானவள் அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா,ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான பெயர்களால் போற்றப்படுகிறாள். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18 திருக்கரங்களுடன், சிரித்த முகத்துடன், மஹிஷனை வதம் செய்யும் கோலத்தில், 9 அடி உயரத்தில், 1008 பெண்கள் மஞ்சள் நீரினால் மஹா அபிஷேகம் செய்து, பல கோடி தன்வந்திரி மந்திரங்களை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவ்வப்பொழுது சூலினி துர்கா ஹோமம், மஞ்சள் குங்கும அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை10.00 மணிக்கு சூலினி துர்கா ஹோமத்துடன் 108கிலோ குங்குமத்தினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

குங்குமாபிஷேகத்தின் சிறப்பு :

குங்குமம் ஆரோக்கியமான அனைத்து செயல்களையும் தோற்றுவிக்கும் அற்புத பொருள் ஆகும். குங்குமம்அனைவரையும் வசீகரிக்க செய்து, தெய்வீகத்தன்மையுடன் சுபதன்மை ஏற்படுத்தும். மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்வதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். தீய சக்திகள் விலகும், ரத்த சம்பந்தமான உள்ள நோய்கள் விலகும். கிருமி நாசினியான குங்குமம் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை தடுத்து மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருகிறது.

நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும். இது பெண்களுக்கு நல்லது. புருவத்தின் மத்தி, சக்தி குவியும் இடம். சுழுமுனை, ஞானக்கண் என அழைக்கப்படுகிறது. இது அறிவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நுண்ணறிவை எட்ட வைக்கும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தும் ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை நெற்றிப் பொட்டில் தான் உள்ளது. ஒருவரின் ஞானம்,பேரறிவு வெளிப்பட காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம் தான். இதை தூண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும். இத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குமத்தை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

ஹோமம் , அபிஷேகத்தின் பலன் :

இப்பூஜையின் மூலம் கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் வம்ச விருத்தியையும், தன விருத்தியையும், சுபிக்ஷத்தையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கையின் பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவி பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கான ஆதாரம்.

சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்னைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்த பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் விலகும்.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images