10th Anniversary Special Danvantri Yajnam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி வருகிற 16.11.2019 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 10 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.

ஸ்ரீ வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் அனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும்புரோகிதர்கள் வரப்போகும் சுப / ஆசுப நிகழ்ச்சிகளுக்கு பலன்களை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு அதற்குண்டான பரிகாரங்களைச் சொல்லி பூஜைகள் செய்து க்ஷேமங்களை உண்டு பண்ணுவதே புரோகிதர்களின்பணியாகும். அப்படிப்பட்ட புரோகிதர்களை நன்கு மதித்து கௌரவிக்க வேண்டியது ஓவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.

நேரம், காலம் என்று பார்க்காமல் தங்கள் குடும்பம், குழந்தை என்று பார்க்காமல் அவர்கள் வாழ்வில் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற முறையில் ஜாதி, இன,மொழி பேதமின்றி மற்றவர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப / அசுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று புரோகிதப்பணி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்விலும் சில பிரச்னைகள், சில வியாதிகள், பலவிதமான தடைகள், மன சஞ்சலங்கள், கருத்து வேறுபாடுகள், பணப் பிரச்சனை, மன உபாதைகள், மனப் போராட்டங்கள் நிகழ்கின்றன.

இத்தகைய கஷ்டங்களை மனதில் கொண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக வருகிற 16.11.2019 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜை மற்றும் யக்ஞங்கள், வாலாஜாபேட்டை, ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி நிரல்

16.11.2019 சனிக்கிழமை

காலை 6.00 மணி : மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வர பூஜை, கணபதி யக்ஞம்,நவக்ரஹ யக்ஞம், ஸ்ரீமந் நாராயண யக்ஞம் (ஜனார்தன யக்ஞம்), ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம்.

8.30 மணி : பூர்ணாஹுதி

9.00 மணி : பிரசாத விநியோகம்

10.00 மணி : நாதஸ்வர இசையுடன் புரோகிதர்கள் ஊர்வலம், பக்தி பஜன்

10.30 மணி : மஹா சமஷ்டி சங்கல்பம்

10.45 மணி : சகல நோய் தீர்க்கும் மஹா தன்வந்திரி யக்ஞம் துவக்கம்

11.15 மணி : ரக்ஷாபந்தனம்

11.30 மணி : கூட்டுப் பிரார்த்தனை

11.45 மணி : மஹா பூர்ணாஹுதி

1.00 மணி : ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளுரை

1.30 மணி : நிர்வாகிகள் நன்றியுரை

2.00 மணி : சிறப்பு அன்னதானம்

2.30 மணி : ஹோம பிரசாதம் வழங்குதல், நிர்வாகிகளை கௌரவித்தல்

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images