11 feet kalyana srivasar pirathishtai done in Danvantri Peedam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று கல்யாண ஸ்ரீநிவாசர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டைநடைபெற்றது..தமிழகத்தில் மட்டுமின்றி உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் 11 அடி உயரத்தில் வேப்ப மரத்திலான சிலை ப்ரதிஷ்டை வருகிற 17.08.216 புதன் கிழமை காலை பௌர்ணமி நன்னாளில் 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் திருவோண நட்சத்திரத்தில் கல்யாண ஸ்ரீநிவாசர் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டைசெய்யப்பட்டது..

சிலையின் சிறப்பு

ஸ்தபதியின் கைவண்ணம் மற்றும் கலை வண்ணத்தில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட இந்த சிலையின் திருமார்பில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னமையா உருவில் கத்தியுடனும் சாலிகிராம மாலை, காசுமாலை ரோஜாமாலை தரித்து மயில்கண், பட்டு வேஷ்டி உடுத்தி ஏராளமான ஆபரணங்களை கொண்டு தசஅவதார சிலைகளுடன் பள்ளிகொண்ட ரங்கநாதருடன் பத்ம பீடத்தில் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் வரம் தரும் வேங்கடவனாக காட்சி தரும் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த திரு.ஜானகிராம் பட்டர் மற்றும் அகோபிலம் துரை அவர்கள் குழுவினரால் நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு அங்குரார்ப்பணம் அங்குற ஹோமம், துவார பூஜை, மஹாகும்ப ஆராதணம்,ஹோமம் நடைபெற்றது.இன்று காலை கோபூஜையுடன் தொடங்கி விஸ்வர்ரூப தரிசனம் கல்யாண ஸ்ரீநிவாசருக்கு ரட்சாபந்தனம் கும்ப கலச பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்று தன்வந்திரி உற்சவருக்கும் பாதுகைக்கும் மஹா திருமஞ்சனம் நடைபெற்றது..இந்த சன்னதி பிரதிஷ்டை வைபவம் ஸ்ரீ ராமானுஜரின் 1000வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அமையப்பெற்றது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார். பின்னர் .ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் அருளையும் மற்றும் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசர் அருளையும் பக்தர்கள் பெற்றுச் சென்றனர்..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்,.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images