11 feet Lord Kalyana Srinivasar perumal concecrated

தன்வந்திரி பீடத்தில் 11 அடிஉயர கல்யாண ஸ்ரீநிவாசர் பிரதிஷ்டை

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வதற்காக பல்வேறு பெயர்களில் பல்வேறு வடிவங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கறார்.அத்தகைய எம்பெருமான் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.08.2016 தேதி கல்யாண ஸ்ரீநிவாசர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டையாகிறார்.

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 9 அடி ஆஞ்சநேயர், 9 அடி உயரத்தில் மகிஷாசுரமர்த்தினி 9 அடி ப்ரத்தியங்கிராதேவி ,9 அடி உயரத்தில் தன்வந்திரி பெருமாள் மற்றும் பல்வேறு விதமான தெய்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் 468 சித்தர்களுக்கும் சன்னதிகள் அமைத்துள்ளார்.

தமிழகத்தில் மட்டுமின்றி உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் 11 அடி உயரத்தில் வேப்ப மரத்திலான சிலை ப்ரதிஷ்டை வருகிற 17.08.216 புதன் கிழமை காலை பௌர்ணமி நன்னாளில் 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் திருவோண நட்சத்திரத்தில் கல்யாண ஸ்ரீநிவாசர் என்ற பெயரில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 75வது விக்கிரமாக தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யபடுகிறது. .

சிலையின் சிறப்பு
இந்தசிலையானது ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பாலாஜி என்ற ஸ்தபதியால் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டதாகும். ஸ்தபதியின் கைவண்ணம் மற்றும் கலை வண்ணத்தில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட இந்த சிலையின் திருமார்பில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னமையா உருவில் கத்தியுடனும் சாலிகிராம மாலை, காசிமாலை ரோஜாமாலை தரித்து மயில்கண், பட்டு வேஷ்டி உடுத்தி ஏராளமான ஆபரணங்களை கொண்டு தசஅவதார சிலைகளுடன் பள்ளிகொண்ட ரங்கநாதருடன் பத்ம பீடத்தில் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் வரம் தரும் வேங்கடவனாக காட்சி தரும் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

10 லட்சம் மதிப்புள்ள இந்த சிலையை கண்ணாடி அறையில் பளிங்குகல் அமைக்கப்பட்டு பிர்மாண்டமாக தன்வந்திரி பீடத்தில்அமைகிறார். இந்த வைபவத்தை முன்னிட்டு லட்சஜப ஹோமத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனையுடன் பூர்வாங்க பூஜையாக வருகிற 15.08.2016 சுதந்திர தினத்தன்று மாலையாகசாலை பூஜை தொடஙகப்பட உள்ளது. இந்த வைபவத்தை சென்னைஅம்பத்தூரைசேர்ந்த திரு.ஜானகிராம் பட்டர் மற்றும் அவர்கள் குழுவினரால் நடைபெறுகிறது..பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்,.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images