பெற்றோர்களை குருவாகவும் தெய்வமாகவும்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் தந்தை ஸ்ரீமத். ஸ்ரீனிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி எனும் பெற்றோர்களை குருவாகவும் தெய்வமாகவும் பாவித்து அவர்கள் மரண படுக்கையில் இருக்கும் தருவாயில் ஸ்வாமிகள் அவர்களுக்கு அளித்த சத்தியத்தின் பேரில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவியுள்ளார்.
468 சித்தர்கள் 75 விதமான திருச்சன்னதிகள்
அதில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ சத்திய நாராயணர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயார், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், யக்ஞஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ மரகதேஸ்வரர் மஹா அவதார பாபா, வல்லலார், குழந்தையானந்த ஸ்வாமிகள், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், போன்ற பல்வேறு தெய்வங்களுக்கும் மஹான்களுக்கும் 468 சித்தர்களுக்கும் 75 வித விதமான திருச்சன்னதிகள் அமைத்துள்ளார்.
பெற்றோர்களுக்கும் ஆலயம்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தை பெற்றோர்களுக்கு அர்ப்பணைக்கும் விதத்திலும் வரும்கால சந்ததிகள் பெற்றோர்களின் அருமை பெருமைகளை தெரிந்துகொள்ளும் விதத்திலும் ஸ்வாமிகளின் பெற்றோர்களுக்காக, எண்ணற்ற மஹான்கள், சாதுக்கள், சன்னியாசிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் முன்னிலையில் தன்வந்திரி பீடத்தில் ஆலயம் அமைத்து பிரதி தினம் ஹோமங்கள், நிவாரண பூஜைகள், ஜயந்தி விழாக்கள், ஆராதனைகள், குரு பூஜைகள், மகேஸ்வர பூஜைகள் நடத்தி வருகிறார்.
22 ஆம் ஆண்டு ஆராதனை
அந்த வகையில் இன்று தை மாதம் சதுர்தசி திதி அவருடைய தந்தையும் குருவுமான ஸ்ரீ. ஊ.வே.ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 22 ஆம் ஆண்டு ஆராதனை நாள் என்பதால் அவர்களுக்காக அமைத்துள்ள ஆலயத்திலும், ஸ்ரீபாத அஸ்தி மண்டபத்திலும் சிறப்பு அபிஷேகமும், ஹோம பூஜைகளும், ஆராதனையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் நடைபெற்றது.
இதில் ஸ்வாமிகளின் குடும்பத்தினர்கள், தன்வ்ந்திரி பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு குருவின் குரு அருள் பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version