பெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 75 சன்னதிகள், சிவலிங்கரூபமாக 468 சித்தர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து உலக மக்களுக்கு நிவாரணம் வேண்டி ஹோம வழிபாடு செய்து வருகிறார். குரு பீடமாக பக்தர்களால் போற்றும் விதத்திலும் சித்தர்கள் பீடமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம் வேலூர் வாலாஜாபேட்டையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான புனித மையம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் அருகில் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக அருள்பாவித்து வருகிறார்கள். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பீடத்தில் இன்று மார்கழி மாதம் 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும் நடைபெற்றது. இன்று காலை 6.00 மணிக்கு கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வேத் விற்பனர்கள் கலந்து கொண்டு ருத்ர ஹோமம் செய்தனர். தன்வந்திரி பீடத்தில் சிவ லிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் அஷ்ட பந்தன மருந்து சார்த்தப்பட்டு காலை 11.30 மணியளவில் மஹா பூர்ணாஹுதி நடைபெற்று மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஒரு சிவ லிங்கத்திற்கு ஒருவர் என்ற முறையில் 468 பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றனர். பின்பு பங்கேற்ற பக்தர்கள் அன்ன பிரசாதங்களை பெற்று சென்றனர். இதில் சுற்றுபுற நகர கிராம மக்கள், ஓம் சக்தி பக்த்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் என ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version