68th Republic Day at Danvantri Peedam

தன்வந்திரி பீடத்தில் 68 வது குடியரசு தினவிழா இன்று 26.01.2017 காலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டாக குடியரசுதினத் திருவிழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து. இனிப்புகள் வழங்கி இலவச மருத்துவ உதவிகளும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.. இதனை தொடர்ந்து அன்னை ஸ்ரீ பாரத மாதா சிலைக்கு சிறப்பு ஹோமத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளை பெறவும் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலனும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த குடியரசுர தினத் திருவிழா நடைபெற்றது. தேசபக்தியுடன் குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images