73rd Independence Day Bharat Matha Homam and five Special Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வமிகள்ஆசிகளுடன் 73 வது சுதந்திர தினம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று 15.08.2019 வியாழக்கிழமைகாலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை கொடி ஏற்றும் விழா, பாரதமாத ஹோமம், அபிஷேக ஆராதனைகள், பௌர்ணமி யாகங்கள், ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள் நடைபெற்றது.

நம் நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமி பிராட்டி அன்னை ஸ்ரீ பாரத மாதாவை போற்றும் வகையில் தேச நலமே தேக நலம், தேக நலமே தேசம் நலம் என்ற தாரக மந்திரத்தின் படி உலக மக்கள் நலனுக்காக கொடி ஏற்றும் விழா நடைபெற்று, ஸ்ரீ பாரத மாதா ஹோமத்துடன் ஸ்ரீ பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஆண், பெண் திருமண தடைகள் தீர்க்கும் கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகமும், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ குபேர லக்ஷ்மி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்களாக நடைபெற்றது.

இந்த யாகங்களில் நெய், தேன், மஞ்சள், சௌபாக்ய பொருட்கள், மூலிகைகள், நவ சமித்துகள், பட்டு வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், புஷ்பங்கள், மேலும் பல்வேறு பொருட்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images