73rd Independence Day Bharat Matha Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15.08.2019 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை சுதந்திர தின விழாவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், பாரதமாதாவுடன் 77 பரிவார தெய்வங்களையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468சித்தர்களையும் பிரதிஷ்டை செய்து தினசரி யாகங்கள் செய்து வருகிறார்.

பாரத தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழைவு பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் பூமித்தாய் என்கிற அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து தேச நலமே தேக நலம், தேக நலமே தேச நலம் என்ற தாரக மந்திரத்துடன் தினசரி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 15.8.2019 வியாழக்கிழமை 73 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காலை 8.00 மணியளவில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றம் மற்றும் பாரத மாதாவிற்கு ஹோமம், அபிஷேகம் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நடைபெற உள்ளது.

1 5 வது வருடமாக 2019 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மற்றும் வியாழக்கிழமை சுதந்திர தினத்தன்று, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட ஹோம பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீ ம்ருத்யஞ்ஜ ஹோமம், ஸ்ரீ பாரத மாதா ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி நடைபெறும். ஹோமம் நிறைவு பெற்ற உடன் ஸ்ரீ பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று பங்கேற்கும் பக்தர்களுக்கு இறை பிரசாதம்வழங்கப்பட உள்ளது.

மேலும் பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images