உலக நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 20.07.2020 திங்கட்கிழமை,மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை,ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.
ஸ்ரீ பிரத்தியங்கிரா சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள். நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள்.
அவள் ஆயிரம் முகங்கள் இரண்டாயிரம் கைகள் சிவப்பேறிய மூன்று கண்கள் கரியநிறம் மிகப்பருத்த சரீரம் பெருங் கழுத்து நீலநிற ஆடையுடன் அருள்பவள் உக்ர பிரதியங்கிரா தேவி. தேவி சாந்தம் அடைய சரபரும் தேவர்களும் ரிஷிகளும் எல்லோருமே துதித்தனர்.
அவள் விஸ்வரூபம் அடங்கி மகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள். சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள்
ஸ்ரீ அதர்வண பத்திரகாளி மகா பிரத்யங்கிரா தேவி. சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க சூலம் பாசம் டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு பக்தர்களுக்கு அருள் புரிபவள்.
அக்னியில் தோன்றிய அம்பிகை
இராணி பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 2014 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் யாகசலை அமைத்து 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மாபெரும் நிகும்பல யாகத்தை 10 நாட்கள் செய்தார்.
அந்த யாகத்தின் 3வது நாளில் அக்னியில் ப்ரத்யங்கிரா தேவியின் ஸ்வரூபம் தரிசனம் தந்து, " எனக்கு இங்கே ஒரு மாபெரும் பீடம் அமைத்து, ஆலயம் அமைக்க வேண்டும். அதர்க்கு யக்ஞ ஸ்வரூபினி ஐஸ்வர்ய பிரத்தியங்கிரா தேவி பீடம் என்று பெயர் அமைத்து மாதம் தோறும் நிகும்பலா யாகம் செய்ய வேண்டும். என்னை வந்து தரிசிப்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யத்தை வழங்குவேன் என்று கூறி மறைந்தாள்.
மகா பிரத்தியங்கிரா தேவி
தேவியின் உத்தரவை ஏற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மஹா பீடத்தை அமைத்து, 9 அடி உயரத்தில் விக்கிரகம் செய்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் கரிக்கோலமாக பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து 2015 மாசி மகத்தில் பிரம்மாண்டமான முறையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இத்தேவியானவள் 9 அடி உயரத்தில், ஐஸ்வர்ய கலசத்துடன், 10 தலை நாகத்துடன், 4 திருக்கரங்களில் நான்கு விதமான ஆயுதங்களுடன் சிம்மத்தின் மேல் அமர்ந்து திருக்காட்சி தருகிறாள்.
இழந்த பதவி கிடைக்கும்
இத்தேவியை பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவியை பெறுவதற்கு இப்பீடத்தில் வந்து யாகங்கள் செய்து மனதார பிரார்த்தனை செய்கிறார்கள்.
ராஜகாளியான இவளிடம் வந்து ராஜ யோகம் கிடைக்க வேண்டியும் யாகங்கள் செய்து செல்கின்றனர்.
சத்ரு பயம், கடன் தொல்லை, பில்லி, சூன்யம், திருஷ்டி, ஏவல், ருணம், ரோகம்,பித்ரு சாபம்.வியாதி, கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் நீங்கவும்,திருமணம், குழந்தை வேண்டி, பிரிந்த தம்பதிகள், பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர, உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு கிடைக்க போன்ற பல்வேறு காரணங்களுக்காக இங்கு யாகங்களில் பங்கேற்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும். இத்தேவிற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெறும் ப்ரத்யங்கிரா யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டு எல்லாவிதமான அஷ்ட துஷ்ட சக்திகளும் நீங்கி ராஜ யோகம் பெறலாம் என்கிறார் டாக்டர் ஸ்ரீமுரளீதரஸ்வாமிகள்.
இந்த யாகத்திற்கு மிளகாய் வற்றல், இனிப்பு வகைகள், நவதான்னியங்கள், சௌபாக்ய பொருட்கள், புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், வேப்ப எண்ணேய், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்களுக்கு உபயம் செய்து பிரார்த்தனை செய்யலாம்.
இதனை தொடர்ந்து அஷ்ட பைரவர் யாகமும் அம்பாளுக்கு 1008.நெய் ஏற்றி துர்க்கா சூக்த பாராயணம் நடைபெறும்.
ஊரடங்கு உத்திரவு அமுலில் உள்ளதால் பொது மக்கள் யாரும் நேரில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சங்கல்பம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் மேலும் தகவல் வேண்டுபவர்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம்.தொடர்புக்கு.04172-230033.9443330203.
திருப்பதியில் இருந்து தெற்கில் சோளிங்கர் - வாலாஜாபேட்டை செல்லும் சாலையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது.
வேலூர் பேருந்து நிலயத்தில் இருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலும் ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி ஆலயம், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது.