Aadi Perukku Special Homam 2019

இன்று 03.08.2019 சனிக்கிழமை ஆடிப்பெருக்கு என்னும் பதினெட்டாம் பெருக்கின் சிறப்பினை தெரிந்து கொள்ளும் விதத்திலும், போற்றி வழிபடும் விதத்திலும் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆருளானைப்படி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அன்னப்படையல், ஸ்ரீசூக்த ஹோமம், மாங்கல்ய சரடு வழிபாடு, கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாரம்பரியங்களின் சிறப்பை மக்கள் அறிந்திடும் விதத்திலும், சமய பூஜைகளைப்பற்றி தெரிந்திடும் விதத்திலும், இயற்கையை துதித்திடும் விதத்திலும், மாங்கல்யத்தின் மகிமையை உணர்ந்து போற்றிடும் வகையிலும், வருண பகவானின் கருணை உலக மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திடும் விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளார்.

அந்த வகையில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு அன்னப்படையல், ஸ்ரீ சூக்த ஹோமம், மாங்கல்ய சரடு வழங்குதல் நடைபெற்று பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ தங்க அன்னபூரணி மற்றும் ஸ்ரீ காயத்ரீ தேவிக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கிரக தோஷங்கள் அகல சனி ப்ரீதி ஹோமமும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images