Aadi Pooram Navadhanya Navagraha Mandalam Pradishtai - Navagraha Homam

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவதானிய நவக்கிரக மண்டலம் பிரதிஷ்டை
நவதானியங்களுக்கும் இந்துக்களின் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும்,சில வழிபாடுகளின் போதும் இந்த நவதானியங்களை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. தன்வந்திரி பீடத்தில் நவதானியங்கள் கொண்டு ஒரு நவதான்ய நவக்கிரக மண்டலம் அமைத்து அதில் அதற்குரிய தானியங்கள் சேர்த்து ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் நீர் சேர்த்து வலம் வர மேற்கண்ட அனைத்து செயல்களில் நன்மைகள் பெறலாம். மேலும் இயற்கை வழிபாடு செய்த பலனும் நவக்கிரக வழிபாடு செய்த பலனும் பக்தர்களுக்கு ஒரு சேர கிடைக்கும் என்கிறார் ஸ்தபாகர் முரளிதர ஸ்வாமிகள்.வருகிற 24.07.2020.ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தில் காலை 9.00 மணி முதல் 10.30.மணிக்குள் வாலாஜபேட்டை தன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் நவதானிய நவக்கிரக மண்டலம் பிரதிஷ்டை மற்றும் நவக்கிரக ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
 
கிரஹம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். நவ கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு துகள்களை காந்தம் எப்படி தன்னிடம் இழுக்கின்றதோ, அவ்வாறே நவக்கிரகங்களும் தங்களுக்கே உரிதான இழுக்கின்ற சக்தியின் வாயிலாக வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய சுக துக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மனிதனின் மனநிலையை அதற்கு ஏற்றவாறு செயல்புரியச் செய்கின்றன.
 
மனித சரீரம் என்ற தேசத்திற்கு சகலோக நாயகரான பரம்பொருளே தலைவர் எனினும், அந்தச் சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அவர் அதிகாரியாக நியமித்து இருக்கிறார்.
 
அவ்வாறு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மங்களில் செய்த வினையை அனுசரித்து அதற்குத் தகுந்த பலன்களைத் தத்தம் தசாபுத்திகள் நடக்கும்போது கொடுத்து வருகின்றன.
 
சூரியன் - தந்தை (ஆத்மா, எலும்பு)
 
சந்திரன் - தாய் (மனம், இரத்தம்)
 
செவ்வாய் மற்றும் ராகு - சகோதரர்கள் (பலம், மஜ்ஜை)
 
புதன் - தாய்மாமன் (வாக்கு, தோல்)
 
குரு - புத்திரக்காரன் (ஞானம், தசை, மாமிசம்)
 
சுக்கிரன் - களத்திரக்காரகன் (காமம், இந்திரியம்)
 
சனி, கேது - ஆயுள் (துக்கம், நரம்புத் தசை)
 
ஒரு மனிதன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா, அவன் எலும்பு பலம் உள்ளதா, தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் எப்படி என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் அவனுடைய சூரியன் இருக்கும் நிலையை அறிந்து சொல்ல முடியும். அப்படியே அந்தந்த கிரகங்களுக்குரிய தானியங்களான நெல், துவரை, எள் போன்றவற்றை உபயோகித்து வருகிறோம். கிரகங்கள் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் ஒன்றி செயல்படுகின்றன என்பது கண்கூடாகும்.
 
வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள் மேலும் வைகயான தேவைகளுக்கு நம்பிக்கையுடன் இந்த பரிகாரம் செய்துவர நினைத்தது நடக்கும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
 
சூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்.
 
சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.
 
கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட ( டிராவல்ஸ் ) தொழில் செய்பவர்கள்,வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள்,உணவகத்தொழில் செய்பவர்கள்,
 
அடிக்கடி பணி இடமாற்றத்தை சந்திப்பவர்கள் இவர்களெல்லாம் இந்தப் பரிகாரத்தை செய்துவர நன்மை உண்டாகும்.
 
செவ்வாய்:- இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.
 
மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி , டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கட்டிடத்தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள்,மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் இவர்களெல்லாம் துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க்கிழமைகளில் தானம் செய்துவர நன்மை பெருகும்.
 
புதன்:- இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.
 
கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத்தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக்கடைக்காரர்கள், ஆடிட்டர்கள், கணக்காளர்கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகுநிலையம் நடத்துபவர்கள் என இவர்கள் பச்சைப்பயறு தானங்களை புதன்கிழமைகளில் செய்துவர நன்மை அளிக்கும்.
 
குரு:- இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.
 
திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார்,
 
கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள், பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபன்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில், அடகுத் தொழில், சிட்பண்ட், கிளப், தவணைமுறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியாளர்கள் என இவர்களெல்லாம் வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.
 
சுக்கிரன்:- இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.
 
கலைத்துறை சார்ந்தவர்கள், இசை, நடனம், கலை, சினிமா, நாடகத்துறை , ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப்பொருள் விற்பனை, அழகுநிலையம், இவர்களெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும்.
 
சனி:- இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.
 
தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை, காலணி கடை, இரும்புத் தொழில், பழைய இரும்பு வியாபாரம்,கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்.
 
ராகு:- இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்,
 
அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், சூதாட்ட விடுதி, மது விற்பனை, மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ், சூப்பர் மார்க்கெட், இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் உளுந்து சம்பந்தப்பட்ட உணவை தானம் தர வளமை பெருகும்.
 
கேது:- இவரின் தானியம் “கொள்ளு.” எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.
 
ஆன்மிகம் தொடர்புடைய தொழில், இறை சம்பந்தபட்ட கடை, பூஜை மற்றும் படக்கடை, உபந்யாசம், புரோகிதம், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், கைடு என்னும் வழிகாட்டி, உளவுத்துறை, தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என இவர்களெல்லாம் கொள்ளு உணவை தானம் தர நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும்.
 
நவதானியங்கள்
உடலுக்குச் சக்தியை அளிக்கக்கூடிய புரதம் நிறைந்த உணவுகள் தான் தானியங்கள். நமது முன்னோர் ஒரு குறிப்பிட்ட, மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த‌ ஒன்பது தானியங்களின் கூட்டத்தையே நவதானியங்கள் என்று அழைக்கின்றனர். இவையே கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை (மொச்சை), எள், உழுந்து, கொள்ளு ஆகும்.
 
இது பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள் அதாவது சூரியன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான ஞாயிறு அன்று உடலுக்கு வெப்பத்தினை அளிக்கக்கூடிய கோதுமையை வகுத்துள்ளனர்.
 
சந்திரன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான திங்களன்று அரிசியை வகுத்தனர். உடலில் உள்ள சீரான ரத்தச் சுழற்சிக்கு சிவப்பு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும்
 
செவ்வாய்க்கிழமை சிவப்பு தானியமான முழு துவரையும், புத்தி கூர்மைக்கு புதனன்று பாசிப்பயறையும், வள‌மான தேகத்துக்கு வியாழக்கிழமையன்று கொண்டைக்கடலையும், உடலின் இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்காக வெள்ளி ஆட்சி பெற்றிருக்கும் நாளில் மொச்சையும், உடலுக்கான கடின உறுப்புக்கள் பலம் பெற சத்துக்களைக் கொண்ட எள்ளினையும், சனிக்கிழமைக்கும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியமான சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு கொள்ளும்,கருப்பு உளுந்தினையும் வகுத்தனர்.
 
நவதானியங்களுக்கும் இந்துக்களின் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும்,சில வழிபாடுகளின் போதும் இந்த நவதானியங்களை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இவை அனைத்தும் மிகவும் சத்துக்கள் நிறைந்தவையாதலால் நம் மூதாதையர்கள் இவற்றை முக்கியப்படுத்தினர்.
 
நவதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
நவகிரகங்களுக்கு ஏற்ற நவதானியங்கள் மட்டுமல்லாது இன்று பல நாட்டு தானியங்களும் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. அவற்றிலும் நார்ச்சத்து வைட்டமின் தாது உப்புக்களுடன் தேவையான புரதச்சத்தும் அதிகம் உள்ளது.
 
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த நவதானியங்கள் கொண்டு ஒரு நவதான்ய நவக்கிரக மண்டலம் அமைத்து அதில் அதற்குரிய தானியங்கள் சேர்த்து ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் நீர் சேர்த்து வலம் வர மேற்கண்ட அனைத்து செயல்களில் நன்மைகள் பெறலாம். மேலும் இயற்கை வழிபாடு செய்த பலனும் நவக்கிரக வழிபாடு செய்த பலனும் பக்தர்களுக்கு ஒரு சேர கிடைக்கும் என்கிறார் ஸ்தபாகர் முரளிதர ஸ்வாமிகள்.
 
மேலும் இயற்கை வளமும். சுற்றுபுற சூழலும். தேக நலனுக்கும் தேச நலனுக்கும் பசுமைக்கும் வழி பிறக்கும். இதனால் பூகம்பம். நில அதிர்வு போன்ற இயற்கை சீற்றங்கலிருந்து தற்காத்து கொள்ளலாம்
 
இந்த நவதான்ய செடிகளை தன்வந்த்ரி பீடத்தில் அன்றாடம் நடைபெறும் கோ பூஜையில் அந்த அந்த கிழமைக்கு உரிய நாளில் அந்த கிரகத்திற்கு உரிய செடிகளை கோ மாதாவிற்கு உணவாக அளித்து கிரஹ தோஷ நிவர்த்தி செய்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்கிறார்
ஸ்ரீ முரளி தர ஸ்வாமிகள்.
 
இந்த மாதிரியான ஒரு அமைப்பு இராணி பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவதானிய மண்டலம் அமைத்து நவக்கிரகமாக பாவித்து வழிபட்டு வரும்போது மண்வளம். மழை வளம். இயற்கை வளம். நாடும் நகரமும். நாமும் இயற்கை தெய்வங்களின் ஆசியுடன் நவகிரங்களின் ஆசியும் ஒரு சேர பெற்று பல்வேறு சிறப்புகள் பெறலாம்..
 
ஊரடங்கு உத்திரவு அமுலில் உள்ளதால் பொது மக்கள் யாரும் நேரில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
சங்கல்பம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் மேலும் தகவல் வேண்டுபவர்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம்.தொடர்புக்கு.04172-230033.9443330203.
 
திருப்பதியில் இருந்து தெற்கில் சோளிங்கர் - வாலாஜாபேட்டை செல்லும் சாலையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது.
 
வேலூர் பேருந்து நிலயத்தில் இருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images