Adithya Homam - Pal Muneeswara Homam and Aradhanai

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோணா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
 
இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி சிறப்பாக நடைபெறவும் சூரிய கிரகணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் சூரிய பகவானின் ஆசிர்வாதங்கள் பெறவும், குலதேவதைகள் மற்றும் கிராம தேவதைகள் ஆசிர்வாதங்கள் பெறவும் ஆதித்ய ஹோமத்துடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கல் வழிபாடும், சிறப்பு ஹோமமும் விசேஷ ஆராதனைகளும், இன்று 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. மேலும் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஸ்வாமிகளின் பெற்றோர்களுக்கு அமைத்துள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
 
நாளை 22.06.2020 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் பைரவரின் ஆசிகளை பெறவும், தங்குதடையின்றி ஹோமம் மற்றும் ஆராதனைகள் நடைபெறவும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு சிறப்பு ஹோமமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
 
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவே சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாரூக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
தொடர்புக்கு :
 
                                      ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
 
                                     அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
 
                                       வாலாஜாபேட்டை – 632513.
 
                                       Ph : 04172 230033 / 9443330203
 
                                      Email : danvantripeedam@gmail.com

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images