தன்வந்திரி பீடத்தில் வருகிற 01.09.2019 ஆவணி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூரிய ஹோமம் நடைபெற உள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும் பங்கேற்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை,தோல் நோய்கள் நீங்கும், ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாகும்.
ஒவ்வொருவரும் வாழ்நாளில் தேவையறிந்து செய்யும் பரிகாரம் தான் ஹோமம் ஆகும். இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்றால் நவக்கிரகங்களின் பரிபூரண அனுக்கிறகம் வேண்டும். அவற்றின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும்நவக்கிரகங்களின் பங்கு முக்கியமாகும்.
ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன் அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம், அரசாங்க தொடர்பு ஆகியவை பற்றியும் சூரியன் குறிப்பிடுவார். ஒருவரது ஜாதக ரீதியாக சூரியனது நிலை கோச்சாரம் அல்லது திசாபுத்திகள் பாதகமாக இருந்தால் சூரிய பிரீதி ஹோமம் செய்து கொள்ளவேண்டும்.
சூரிய ஹோமத்தின் மூலம் சூரிய பகவான் அனுக்கிரகத்துடன் வளமும் நலமும் பெற்று, நீடித்த ஆயுள், இளமை,உயர்ந்த அறிவு, நிறைந்த செல்வம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வை பெறலாம்.
மேற்கண்ட ஹோமத்தை பாஸ்கர ஹோமம் என்றும் ஆதித்ய ஹோமம் என்றும் பானு ஹோமம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கபட்டு வருகிறது. இந்த ஹோமத்தில் பங்கு பெறுவதன் மூலம் சூரிய பகவானின் அருள் பெற்று கீழ் கண்ட பலன்கள் பெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது:
அரசாங்க வேலையில் ஏற்படும் தடைகள் விலகி பதவி உயர்வு பெறலாம், பாவங்கள் கரையும், கவலை, துக்கம்,வேதனை ஆகியவை நீங்கும், நோய்கள் அகலும் அதிலும் குறிப்பாக இதயம், கண் தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், தீய சக்திகள் விலகும், கிரஹ தோஷங்கள் அகலும், ஏழரை சனியின் தாக்கம் குறையும்,தசா புக்தி தோஷங்கள் விலகும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம், இருள் நீங்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சூரிய பகவானை வேண்டி நடைபெறும் சூரிய ஹோமத்தில் பங்குபெற்று நலம் பெற அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இந்த தகவலை தன்வந்திர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.