Aishwaryam Tharum 5 Homams 2019

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன்கருதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரைகீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது..

1 . நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்தி ஹோமம்.

2. எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.

3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.

4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.

5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.

யாகங்களை முன்னிட்டு காலை கோ பூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு பூஜையும்நடைபெற்றது.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் :

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள்எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்)அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள்,நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், தொழில் வியாபார அபிவிருத்திஎன்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற இந்த யாகங்களில் வேலூர் மாவட்ட DIG திருமதி வனிதா IPS அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் BSNL DGM திரு. வெங்கட்டராமன் அவரகள், சென்னை போரூர் ஸ்ரீ ரமணா இண்டச்ட்ரீஸ் திரு. குணசேகரன் அவர்கள் குடும்பத்தினர், பாண்டிச்சேரி திரு. சீனுவாசன் அவர்கள் குடும்பத்தினர், வாலாஜாபேட்டை திரு. துரைவேலு அவர்கள் குடும்பத்தினர், ஏராளமான மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்குகொண்டு நக்ஷத்திர தோஷம், ஆயுள் தோஷம், பயம், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள்ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று தமிழ் புத்தாண்டில் அனைத்து நலன்களையும் பெற்று வாழபிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பஙேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீதன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images