AMAVASAI YAGAM - PRATHYANGIRA YAGAM

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் யாகம், சரப சூலினி பிரத்யங்கிரா யாகம், ஔஷதம் வழங்குதல், பிரத்யங்கிரா தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று வருகிறது .  அந்த வகையில், ஹோமமே ஷேமம்,யாகமே யோகம் என்ற தாரக மந்திரத்துடன் பல்லாயிரக்கணக்கான யாகங்கள் நடைபெற்றுள்ள ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்,  அமாவாசை திதியை முன்னிட்டு  24.10.2022 திங்கள்கிழமை  மிளகாய் யாகம், சரப சூலினி பிரத்யங்கிரா யாகம், ஔஷதம் வழங்குதல், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. அமாவாசை யாகத்தின் சிறப்பு அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் கலந்து கொள்வது சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவு கூர்ந்து நாம் செய்யும் வபாடுகள் தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல் ஆகும். இதனால் முன்னோர்களின் பரிபூரண ஆசி நமக்கு கிடைக்கும், துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைந்து முக்தி கிடைக்க பெறுவார்கள்.மேலும் செய்வினை கோளாறுகள் , ஒரே வீட்டில் இருவருக்கு ராகு திசை அல்லது கேது திசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாகதோஷம், சர்ப்பதோஷம், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக்கூடிய தடைகள் அகலவும், பணப்பிரச்சனை , கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் , ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 24 மணி நேர அணையா யாக குண்டத்தில் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மகிஷாசுரமர்த்தினி, ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், ஔஷதம் மற்றும் அன்னப்பிரசாதம் ஸ்வாமிகளின் திருக்கரங்களால் வழங்கப்பட உள்ளது. 

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images