மிக உக்ரம் படைத்த ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை அதர்வண காளி அல்லது சிங்கமுக காளி என்றும் அழைப்பார்கள்.இந்த தேவியை வீட்டில் வைத்து வழிப்பட கூடாது இந்த தேவியை சாந்தப்படுத்த விஷேசமான நாளான அமாவாசையில் இவளுக்கு பிடித்தமான சிவப்பு மிளகாய், உப்பு, மிளகு, வேப்பிலை,நெய்,நெய்யில் செய்த பட்சணங்களையும் மற்றும் முக்கியமான திரவியங்களை கொண்டும் நல்ல வேத விற்பனர்களை கொண்டு யாகம் நடத்தப்படுகிறது. இந்த உக்கரமான ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி பில்லி, சூனியம்,ஏவல்,துர்தேவதைகள் மற்றும் துஷ்டர்களையும் அழித்து தன் பக்தர்களை காப்பாற்றி, நல்ல பலவிதமான செல்வங்களையும்,மக்கட் செல்வத்தையும், மன நிம்மதியும், குடும்ப ஒற்றுமையும், ஆரோக்கத்தையும் கொடுப்பாள் என்பது நிச்சயம். இந்த ப்ரத்யேகமான யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார்.இதில் பக்த கோடிகள் அனைவரும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியின் அருளையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நல்லாசிகளையும் பெற்று நலமுடன் வாழ விழைகிறோம்.
Tamil version